1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 16 ஜூன் 2018 (15:39 IST)

உலகக்கோப்பை கால்பந்து தொடர்: இன்றைய போட்டிகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பிரான்ஸ்-ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா - ஐஸ்லாந்து , பெரு-டென்மார்க், குரோஷிமா-நைஜீரியா என 4 போட்டிகள் நடைபெற உள்ளது
 
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி நேற்று முன்தினம் ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்கியது. 
 
இந்நிலையில் இன்று மதியம் 3.30 மணிக்கு ‘சி’ பிரிவில் பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் லீக் ஆட்டம் அலினாவில் நடக்கிறது.
 
இதையடுத்து, மாலை 6.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ‘டி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா - ஐஸ்லாந்து அணிகள் மோதுகின்றன.
 
அதையடுத்து, இரவு 9.30மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள பெரு-டென்மார்க் அணிகள் மோதுகின்றன
 
அதைத்தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் டி பிரிவில் உள்ள குரோஷிமா- நைஜீரியா அணிகள் மோதும் லீக் ஆட்டம் நடைபெறுகிறது.