ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2017 (11:20 IST)

அதிமுக, திமுக பிரமுகர்களுடன் கமல் ரகசிய சந்திப்பு?

உலகநாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்ட நிலையில் மிக விரைவில் அவரது கட்சி, சின்னம் மற்றும் கொடி அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது



 
 
இந்த நிலையில் ஏற்கனவே கேரள, டெல்லி முதல்வர்களுடன் ஆலோசனை செய்துள்ள கமல் விரைவில் மேற்குவங்க முதல்வருடனும் ஆலோசனை செய்யவுள்ளார்.
 
அதுமட்டுமின்றி திமுக, அதிமுக மாஜி அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடமும் கமல் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த கட்சிகளின் கட்டமைப்பு, அரசியல் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இவர்களில் ஒருசிலர் கமல் கட்சியில் சேரவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுவதால் அதிமுக, திமுக கட்சிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.