சிவாஜி விழாவை முதல்வர் புறக்கணித்தது ஏன்? திடுக்கிடும் தகவல்
சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் முதல்வர், துணை முதல்வர் இருவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரபு கோரிக்கை விடுத்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழாவை புறக்கணிக்க அவரது நலம் விரும்பிகள் கொடுத்த ஆலோசனைதான் காரணம் என்று கூறப்படுகிறது.
சிவாஜி சிலையை கருணாநிதி திறந்துவுடன் தான் அவருக்கு அடுத்தடுத்து சோதனை வந்ததாகவும், அதேபோல் அந்த சிலையை எடுக்க தமிழக அரசு முடிவு செய்த பின்னர்தான் ஜெ அரசுக்கும் சோதனை வந்தது என்றும் செண்டிமெண்டாக அவரது நலவிரும்பிகள் முதல்வருக்கு ஆலோசனை கூறினார்களாம்.
மேலும் இந்த விழாவில் கமல், ரஜினி இருவரும் கலந்து கொள்ளவிருப்பதால் அரசியல்ரீதியாக வரும் சில பிரச்சனைகளை தவிர்க்கவே முதல்வர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும், சசிகலா குடும்பத்தினர்களுக்கு உறவினரான சிவாஜி குடும்பத்துடன் நெருக்கம் அதிகம் தேவையில்லை என்று ஆலோசனை கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.