பிக்பாஸ் சீசன் 2: கமலுக்கு கல்தா, உள்ளே வரும் பிரபல நாயகன்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பலவிதமான முரண்பாடுகளை கொண்டு ஒருவழியாக முடிந்தது. முதலில் இந்த நிகழ்ச்சி போலி என்றும் நடிப்பு என்றும் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் ஓவியாவின் வெளியேற்றத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.
மேலும் பிக்பாஸ் மேடையை கமல் அவ்வப்போது அவரது அரசியலுக்கும் பயன்படுத்தியதை பிக்பாஸூம் ரசிக்கவில்லை, பார்வையாளர்களும் ரசிக்கவில்லை. இறுதியாக ஆரவ் வின்னர் என்பதை இப்போதுகூட யாராலும் நம்பமுடியவில்லை.
இந்த நிலையில் விரைவில் பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பிக்கப்படவுள்ளதாம். இரண்டாம் சிசனுக்கு கமலுக்கு கல்தா கொடுக்க டிவி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும், அவருக்கு பதில் சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. ஏற்கனவே விஜய்டிவி நடத்திய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை சூர்யா நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.