வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2017 (16:53 IST)

தீவிரவாதிகளின் ஆதரவாளராக கமல் மாறிவிட்டார் - ஹெச்.ராஜா தாக்கு

நடிகர் கமல்ஹாசன் தீவிரவாதிகளின் ஆதரவாளராக மாறிவிட்டார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் வெளியிட்டிருந்த ஒரு பதிவில் ‘ இந்து தீவிரவாதம் இனியும் இல்லை எனக் கூற முடியாது’ எனக் குறிப்பிட்டிருந்தார். வட மாநிலங்களில் தலித் மக்களின் மீது பாஜக நபர்கள் தொடுத்து வரும் தாக்குதலைத்தான் அவர் அப்படி குறிப்பிட்டார் என கருத்து நிலவி வருகிறது.
 
இந்நிலையில், ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் “ விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது முஸ்லிம் அமைப்புக்கள் 20 வருடத்திற்கு கமலின் பயம் போகாது என்றது சரிதான் போல. இந்துக்கள் மீது தாக்குதல் வெட்கம்.
 
கமல் எப்போதுமே இந்துவிரோதி என்ற நிலை மாறி தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு promote ஆகி உள்ளார். தேசபக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.