ரஜினியை முந்திய விஜய்
வசூல் சாதனையில் ரஜினியை முந்திவிட்டா விஜய் என்கிறார்கள்.
இதுவரை வெளியான தமிழ் சினிமாக்களிலேயே, தமிழ்நாட்டில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது ரஜினி நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ படம்தான். அதன்பிறகு வெளியான ‘பாகுபலி’, அந்தச் சாதனையை முறியடித்தது. விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படமும் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து ‘எந்திரன்’ சாதனையை முறியடித்துள்ளது. ஆனால், ‘பாகுபலி’ சாதனையை இன்னும் ‘மெர்சல்’ முறியடிக்கவில்லை. 108 கோடி ‘எந்திரன்’ சாதனையை முறியடித்த ‘மெர்சல்’, 120 கோடி ‘பாகுபலி’ சாதனையை விரைவில் முறியடிக்கலாம் என்கிறார்கள்.