1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2017 (16:28 IST)

படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள் - ராய் லட்சுமி பரபரப்பு பேட்டி

மேனேஜர் இல்லாத நடிகைகளே சபல புத்தியுள்ள தயாரிப்பாளர்களிடம் சிக்குகிறார்கள் என நடிகை ராய் லட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் சமீபத்தில் ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல நடிகைகள் துணிந்து தற்போது அவருக்கு எதிராக பல ஹாலிவுட் நடிகைகள் புகார் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகை ராய் லட்சுமி “ஹார்வி வெயின்ஸ்டீன் போல சில தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், எல்லோரும் அவரைப் போல் கிடையாது. பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


 

 
நானும் எனது சினிமா வாழ்க்கையில் அதுபோன்ற தயாரிப்பாளர்களை சந்தித்துள்ளேன். ஆனால், அவர்களை எப்படி கையாள்வது என எனக்கு தெரியும். தற்போது சமூக வலைத்தளம் வந்துவிட்டதால், வெயின்ஸ்டீன் போன்ற தயாரிப்பாளர்கள் பயப்படுவார்கள். நல்ல மேனேஜர் இல்லாததால் வளர்ந்து வரும் நடிகைகளே இதுபோன்ற தயாரிப்பாளர்களிடம் சிக்குகிறார்கள். தானாக சென்று வாய்ப்பு கேட்கும்போதுதான் இப்படியெல்லாம் நடக்கிறது” என கூறினார்.