1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
  4. ttf vasan wife post about his husband

லெட்டர் போட்டேன்.. உங்களால படிக்க முடியல.. லவ் யூ மாமா!.. TTF வாசன் மனைவி ஃபீலிங்...

ttv vasan
பைபாஸ் சாலையில் பைக்கை வேகமாக ஓட்டி அதை வீடியோவாக பதிவு செய்து youtube-யில் வீடியோ வெளியிட்டு சிறுசுகளிடம் பிரபலமானவர் டி.டி.எப்.வாசன். ஆனால் விபத்தில் சிக்கியதால் அவரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. ஒரு திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் டிடிஎப் வாசன் சரியான ஒத்துழைப்பு கொடுப்பதில்லை எனக் கூறி அந்த படத்திலிருந்து தூக்கப்பட்டார். தற்போது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக டி.டி.எப் வாசன் பங்கேற்றுள்ளார். ஒருபக்கம், ஒரு வருடத்திற்கு முன்பு டி.டி.எப் வாசன் திருமணமும் செய்து கொண்டார்..

இந்நிலையில், டி.டி.எப் வாசனின் மனைவி பிரகாஷினி தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் ‘ஆறு வருட காதல்.. கனவுகள்.. அதன்பின் என் வேண்டுதலின் பலன்.. என கனவாய் இருந்த நீங்க இன்னைக்கு என் புருஷனா என் வாழ்க்கையில் இருக்கீங்க.., உங்ககிட்ட சொல்ல நிறைய கதைகள் இருக்கு.. ஒரு லெட்டர் கூட எழுதினேன். ஆனால் உங்களால் அதை படிக்க முடியாமல் போயிடுச்சு.. பரவாயில்லை மாமா.. சில உணர்வுகளுக்கு வார்த்தைகள் தேவையில்லை.. நீங்க நினைக்கிறது விட உங்கள ரொம்ப லவ் பண்றேன்’ என அதில் உருகியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பாட பிடிக்காது.. ஃபீல்ட் அவுட் ஆனாலும் சினிமாவில் பாடுவேன்!.. அனிருத் பேட்டி வைரல்...