KPY பாலாவுக்கு 2 லட்சம் கொடுத்த பிரபலம்!.. எதுக்கு தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானவர் கே.பி.ஒய் பாலா. சம்பாதித்த பணத்தில் பெருமளவு பலருக்கு உதவுவதற்காகவே இவர் செலவிட்டு வருகிறார். ஏழைகள் பிழைப்பதற்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுப்பது, அருகில் மருத்துவமனை இல்லாத மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது, பள்ளிக்கு செல்ல, பணிக்கு செல்ல ஏழைப் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்கி கொடுப்பது போன்ற பல சமூக சேவைகளை இவர் செய்து வருகிறார்.. காந்தி கண்ணாடி என்கிற திரைப்படத்திலும் பாலா நடித்துள்ளார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் ஒரு முக்கிய தகவலை பாலா பகிர்ந்து கொண்டார். நான் பொதுவாக அதிக விலைகளில் ஆடைகளை அணிய மாட்டேன்.. ஒருமுறை என்னை பார்த்த நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஏன் இது போன்ற ஆடைகளை அணிகிறாய்? என்று கேட்டார்.
அதன் பின் நான் சம்பாதிக்க பணத்தில் பெரும்பளவு மற்றவர்களை கொடுத்து விடுகிறேன் என புரிந்து கொண்டவர் என் கையில் இரண்டு லட்ச ரூபாயை கொடுத்து நல்ல உடைகளை வாங்கிக்கொள்.. இந்த பணத்தை நீ வேறு யாருக்கும் கொடுக்க கூடாது என கூறினார் என நெகிழ்ச்சியுடன் பேசினார்.