1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijay explain he did not comment about vijay

நான் பேசியது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக மட்டுமே!.. விஜய் சேதுபதியே சொல்லிட்டாரே!...

vijay sethupathi
சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி லீடர்ஷிப் குவாலிட்டி குறித்து பேசிய சில கருத்துக்கள் விஜய் ரசிகர்களுக்கும், தவெகவினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர் மறைமுகமாக தமிழக முதல்வர் ஜோசப் விஜயைத்தான் விமர்சிக்கிறார் என நினைத்த அவர்கள் விஜய் சேதுபதி முகம் தரக்குறைவாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.

விஜய் சேதுபதி திமுகவின் ஆதரவாளர் கடந்த திமுக ஆட்சியில் அவர் எதுவுமே வாய்ஸ் பேசவில்லை ஆனால் தற்போது பேசுகிறார் என அவர்கள் கருத்து தெரிவித்தனர் சில தவெக எம்.எல்.ஏக்களும் விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்து கூறியிருந்தனர்.

இந்நிலையில், இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள விஜய் சேதுபதி ‘நான் பேசும் கருத்துக்கள் இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.. வெளியில் இருக்கும் ஒரு தனி நபரையோ, அல்லது அமைப்பையோ சாராது.
நான் சொல்லாமலே இது மக்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைத்தேன்.. ஆனால் தற்போது சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிட்டது’ என்று கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தாய் மாமன் மோதிர திட்டத்தை துவங்கிவைக்கும் விஜய்!.. 2 மாவட்டங்களுக்கு No!...