விலை உயர்ந்த வாட்ச்சுடன் வந்த நபர்.. டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு!...
விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாட்டிலிருந்த்கு வாங்கி வரும் தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை தொடர்ந்து பறிமுதல் செய்து வருகிறார்கள். என்னதான் கெடுபிடி விதித்தாலும் பலரும் வெளிநாட்டிலிருந்து ஏமாற்றி தங்கம், வைரம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில்தான், டெல்லியின் ஐஜிஐ விமான நிலையத்தில் முன் அனுமதி இல்லாமல் சுமார் ரூ.94 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்துடன் துபாயிலிருந்து வந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று மடக்கி பிடித்தனர்.
மெட்டல் டிடெக்டரில் அலர்ட் வந்ததையடுத்து சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அது சுவிஸ் நாட்டின் Patek Philippe Aquanaut கடிகாரம் என தெரியவந்தது. கடிகாரத்தை பறிமுதல் செய்து சுங்கச் சட்டம் பிரிவு 104-ன் கீழ் பயணியை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..