பறவைக் காய்ச்சல் பீதி!.. கோழி இறைச்சி விற்பனை பாதிப்பு....
தமிழகத்தில் ஒவ்வொரு முறை பறவை காய்ச்சல் பற்றிய செய்தி வரும் போதெல்லாம் பிராய்லர் கோழி இறைச்சி விற்பனை வெகுவாக குறையும். சமீபத்தில் கடலூர் மாவட்டத்தில் சில ஊர்களில் விற்பனைக்காக வளர்க்கப்பட்ட பிராய்லர் கோழிகள் கொத்துக்கொத்தாக இறந்து போயின.
கால்நடை பராமரிப்பு பராமரிப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது அந்த கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த கோழிகள் பாதுகாப்பாக புதைக்கப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் பலரிடமும் பறவைக் காய்ச்சல் பீதி பரவியது..
எனவே அவர்கள் கோழி இறைச்சி வாங்குவதை தவிர்த்து வருகிறார்கள். இதனால் கடலூரில் கோழி இறைச்சி விற்பனை பாதியாக குறைந்துவிட்டது. ஒரு பக்கம் கார்த்திகை மாதம் பிறந்து விட்டதால் நிறைய பேர் ஐயப்பனுக்கு மாலை போடுகிறார்கள்.. அதன் காரணமாகவும் அவர்கள் அசைவ உணவுகளை தவிர்த்து வருகிறார்கள். இதுவும் கோழி இறைச்சி விற்பனை பாதிப்புக்கு காரணம் என சொல்லப்படுகிறது..
ஒரு நாளைக்கு 75 கிலோ வரை கோழிக்கறி விற்பனையாகும் நிலையில் தற்போது 30 முதல் 40 கிலோ வரை மட்டுமே விற்பனை ஆவதாக பிராய்லர் கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள் சொல்கிறார்கள். பறவை காய்ச்சல் பீதி மற்றும் ஐயப்ப பக்தர்கள் காரணமாக முட்டை விலையும் 7 ரூபாய்க்கு கீழே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.