பறவைக்காய்ச்சல் எதிரொலி!.. ஆஃப்பாயில் சாப்பிட வேண்டாம்!. சுகாதாரத்துறை எச்சரிக்கை!..
சில நாட்களுக்கு முன்பு சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் காக்கைகள் தானாக இறந்து விழுந்தன. அவற்றின் மாதிரிகளை சோதித்து பார்த்ததில் அவற்றிற்கு பறவை காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
இதையடுத்து பறவைக் காய்ச்சல் முதலில் கோழிகளை தாக்கும் என்பதால் கோழி இறைச்சி சாப்பிட வேண்டும் என்றெல்லாம் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஒருபக்கம் மத்திய சுகாதாரத் துறை சார்பாகவும் பல அறிவுரைகள் வழங்கப்பட்டது..
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பறவைக்காய்ச்சல் தொடர்பாக எல்லா மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. எங்கேனும் காக்கா உள்ளிட்ட பறவைகள் இறந்து கிடந்தால் அதை கையால் தொட வேண்டாம். அதை எரிக்க வேண்டும் அல்லது 8 அடி பள்ளம் தோண்டி புதைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல் திடீரென உயிரிழக்கும் கோழிகளை சாப்பிட வேண்டாம்.. ஆஃப் பாயில் சாப்பிட வேண்டாம்.. கோழி இறைச்சி சாப்பிட விரும்புபவர்கள் அதை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை மனிதர்கள் யாரும் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை. மாவட்ட அளவில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்று அவர் கூறியிருக்கிறார்..