1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (12:17 IST)

பிப்ரவரி வந்தா 113 வயசு.. ஆனா அதுக்குள்ள..! – கின்னஸ் சாதனை தாத்தா காலமானார்!

உலகின் மிகவும் வயதான நபர் என கின்னஸ் சாதனை படைத்த முதியவர் உடல்நலக் குறைவால் காலமானார்.

உலகம் முழுவதும் பல்வேறு விதமான சாதனைகளுக்காகவும் கின்னஸ் வழங்கப்பட்டு வருகிறது. உலகின் உயரமான மனிதர், குள்ளமானவர், பருமனானவர் என பலரும் கின்னஸில் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில் உலகிலேயே மிகவும் வயதான நபராக கின்னஸ் சாதனை படைத்தவர் ஸ்பெயினை சேர்ந்த சடர்னினோ.

கடந்த ஆண்டு தனது 112வது வயதை பூர்த்தி செய்த இவர் பிப்ரவரியில் தனது 113வது பிறந்தநாளை கொண்டாடி தனது சாதனையை தானே முறியடிக்க இருந்தார். இந்நிலையில் உடல்நல குறைவால் தற்போது அவர் காலமாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.