புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (15:34 IST)

சமாதான பேச்சுவார்த்தை: ரஷ்யாவின் அழைப்பை நிராகரித்தது உக்ரைன்!

கடந்த 4 நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் உக்ரைனுக்கு அதிக சேதம் இருந்தாலும் மாநாடு சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பின் தளமாக செயல்படும் பெலாரஸில்  அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று உக்ரைன்  தெரிவித்துள்ளது. 
 
பெலாரஸ் நாட்டில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என ரஷ்யா விடுத்த அழைப்பை உக்ரைன் நிராகரித்து. பெலாரஸ் தவிர வேறு இடத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால் நாங்களும் தயார் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார்
 
இதனை அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.