புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (12:41 IST)

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் மகிழ்ச்சி

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மற்றும்  கேரள மாணவர்கள்    இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

 உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இன்று  4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், கார்கின்  நகரை ரஷ்யா முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாகவும் 471 உக்ரைன் ராணுவ   வீரர்களைப் பிடித்துவைத்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மற்றும் மாணவர்கள்    இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களை தாயக அழைத்துவரக்கூட ஆபரேசன் கங்கா என்ற நடவடிக்கை எடுத்துவருகிறது.  3வது விமானத்தில் சுமார் 240  மாணவர்கள் இந்தியா வந்துள்ளனர்.  இதில்,  தமிழகம் மற்றும் கேரள மாணவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், மாணவர்களின் பயண செலவுகளை அரசே ஏற்கும் எனவும், பதிவுசெய்துள்ள 1800 மாணவர்களை தமிழகத்திற்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.