1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (10:27 IST)

உக்ரைனில் இருந்து சென்னை வந்த தமிழக மாணவர்கள்: பெற்றோர் மகிழ்ச்சி!

உக்ரைனில் இருந்து சென்னை வந்த தமிழக மாணவர்கள்: பெற்றோர் மகிழ்ச்சி!
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் உள்பட இந்திய மாணவர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது உக்ரைனில் சிக்கியிருந்த தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டு சென்னை வந்துள்ளனர் 
 
அவர்களை தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் வரவேற்றனர். மேலும் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட கேரள மாணவர்களும் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர்கள் சென்னையிலிருந்து கேரளாவுக்கு அனுப்பப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
உக்ரைனில் இருந்து மீட்க தமிழக மற்றும் கேரள மாணவர்கள் நீக்கப்பட்டதை அடுத்து அவர்களுடைய குடும்பங்கள் அனைவருக்கும் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களுடைய குழந்தைகளை வரவேற்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன