1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (11:28 IST)

தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் சேவை திடீர் பாதிப்பு: பயணிகள் தவிப்பு

Chennai Train
தாம்பரம் - கடற்கரை இடையே இயங்கிவரும் மின்சார ரயில் சேவை திடீரென பாதிப்பு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதியில் உள்ளனர் 
 
காஞ்சிபுரம் செங்கல்பட்டு தாம்பரம் ஆகிய பகுதிகளில் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ள நிலையில் இவர்களுக்கு பெரும்பாலும் மின்சார ரயில் தான் உதவியாக இருந்தது 
 
இந்த நிலையில் இன்று திடீரென உயர் அழுத்த கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளது 
 
இதன் காரணமாக தாம்பரம் கடற்கரை இடையே இங்கு வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பள்ளி கல்லூரி மற்றும் பணிக்கு செல்வோரும் நடுவழியில் தவிர்த்து வருகின்றனர்
 
இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கோளாறு சரி செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் மீண்டும் தாம்பரம் - கடற்கரை ரயில் சேவை இயங்கும் என்றும் ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran