திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2022 (20:31 IST)

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் கீழே விழுந்து பலி!

சென்னை அடுத்துள்ள வண்டலூரில் கேளம்பாக்கம் சாலையில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர் யுவராஜ் தவறிவிழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சென்னை அடுத்துள்ள   நல்லம்பாக்கம் அருகேயுள்ள கலைஞர் தெருவில் வசித்து வந்தவர் யுவராஜ்(16). இவர் மாம்பாக்கம் அரசினர் மேல்  நிலைப்பள்ளியில் 11 ஆம்  வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், இன்று  காலையில் கண்டிகை பேருந்து நிலையத்தில் இருந்து  கேளம்பாக்கம்  நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

அப்போது,  பேருந்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவர் முன்பக்கம் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்றுள்ளார்.

கண்டிகை அருகே பெட்ரோல் பங்க் பேருந்து வந்தபோது. மாணவன் கை  நழுவி படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துள்ளார், பேருந்தின் பின்சக்கரம் அவர்  மீது  ஏறியதில் மாணவன் சம்பவ இடத்தில் பலியானார்.

இதுகுறித்து தாழம்பூர் காவல்துறை வழக்குப்பதிவு விசாரித்து வருகிறது. இந்தச் சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Sinoj