ரயிலில் பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற பெண்!
சென்னையில் பச்சிளம் குழந்தையை ஒரு பெண் ரயிலில் தவிக்கவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு வந்த மின்சார ரயில் 4 வது மேடையில் நின்றபோது, அதில் வந்த பயணிகள் எல்லோரும் இறங்கினர். அப்போது, பெண்கள் கம்பார்ட்மென்டில் ஒரு பை மட்டும் கிடந்தது.
அந்தப் பையினுள் ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்கள்ம் இதுகுறித்து, ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டு, இந்தக் குழந்தையை தாயாரே விட்டுச் சென்றாரா? கடத்திவரப்பட்டடதா? என்று இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகள் நல காப்பகத்தில் இதுகுறித்து கூறியது, அவர்கள் குழந்தையை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Edited by Sinoj