1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (16:28 IST)

தயவுசெஞ்சு தாம்பரம் பக்கமா போகாதீங்க..! – வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்!

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வெளியூர் செல்லும் வாகன ஓட்டிகள் தாம்பரம் வழியில் செல்ல வேண்டாம் என போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோப்புப்படம்

தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் நாளை முதல் தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதவிர தனியார் பேருந்துகள் பலவும் முழுவதும் புக் ஆகியுள்ளது.

சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்கள் பெரும்பாலும் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவதால் விழாக்காலங்களில் பெருங்களத்தூர், தாம்பரம் சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.


இந்நிலையில் சொந்த ஊருக்கு வாகனங்கள் செல்லும் வாகன ஓட்டிகள் பெருங்களத்தூர், தாம்பரம் பாதையில் செல்லாமல், பதிலாக திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் – செங்கல்பட்டு சாலையை பயன்படுத்தினால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் என போக்குவரத்துத்துறை வலியுறுத்தியுள்ளது.

Edited by Prasanth K