1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (12:33 IST)

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!

இந்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தேசிய அளவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அரசு தங்கள் நிலைபாடு குறித்து விளக்கம் அளித்துள்ள போதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. பல இடங்களில் போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டதால் போலீஸ் கெடுபிடி அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் வாஷிங்க்டன் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்திய இறையாண்மைக்கு எதிரானதாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.