24 மணி நேரத்தில் 100 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..
ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்று குவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தாலிபான் பயங்கரவாத அமைப்புடன் நடத்தி வந்த அமைதி பேச்சுவார்த்தை முறிந்தத்தை தொடர்ந்து, பயங்கரவாதிகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. மேலும் தாலிபான்களை களையெடுக்க ராணுவமும் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர் 190 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 45 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் ஐந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.