வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. ‌கி‌றி‌ஸ்ம‌ஸ்
Written By சினோஜ் கியான்
Last Updated : செவ்வாய், 24 டிசம்பர் 2019 (17:16 IST)

இயேசுவின் பிறப்பும் ...கிறிஸ்துமஸ் பண்டிகையும்...

வரலாற்றின் நிகழ்வுகளை முழுமையாய்த் தெரிந்து கொள்ள நாள்காட்டி போல் ஆண்டுகளைத் துள்ளியமாய்த் தெரிந்து கொள்ள உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்த கிரிகோரியன்  முறைதான் ( கிமு) கிறிஸ்து பிறப்பதற்கு  முன்  (Before Christ)  ; கிறிஸ்து பிறப்பிற்குப் பின் (கி.பி)  Anna Domini ) இந்த முறையை உருவாக்கிய  பெருமைக்குரியவர் கிருஸ்து பிறப்பதற்கு முன் , அதாவது ஏறக்குறைய 5 – 6 ம் நூற்றாண்டில் சிரியாவில் பிறந்த தியோனிசியசு என்பவர் ஆவார்.

இந்த வழக்கத்துக்கு பிற மதத்தினர் மாற்றுக் கருத்துகளை முன்வைக்கவே வல்கர் ஏரா ( பொதுமக்கள் ) என்ற சொல்லில் இருந்து உருவானது பொதுஆண்டு ( common era ) வரலாற்றாய்வாளர்கள் , தொல்லியல்  நிபுணர்களும் கடந்த 1708 முதல் இந்த பொதுஆண்டைப் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, இந்தப் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த பொதுஆண்டு குறிப்பிடும் முறை வழக்கத்துக்கு முன்வரை, கிறிஸ்துக்கு முன் என்ற இருப்பதை இப்போதைய சிலப் புத்தகங்களிலும் காணமுடியும். அந்த அளவுக்கு கிறிஸ்துவின் உன்னதமான புகழ் செல்வாக்குச் செலுத்தி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உலகில் பரவி இருந்தது. ஆங்கிலேயர்கள் காலனி ஆதிக்கம் இருந்த கீழை நாடுகளிலும் அது கொடிகட்டிப் பறந்தது. இன்றும் கூட உலகில் அதிகப் பெரும்பான்மையாக மக்கள் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. 

கிறிஸ்துவின் பிறப்பு ;

ஏரோது மன்னன் யூதேயாவை ஆண்டுவந்தபோது,   தாவீதின் நகரமான பெத்லகேமில், பரிசுத்த ஆவியால் கர்ப்பம் தரிக்கப்பட்ட கன்னிமரியாளுக்கும் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்புக்கும் ,  மாட்டுத் தொழுவத்தில் இயேசு பிறந்தார். அப்போது இயேசு பிறந்திருக்கிறார்  என்பதன் அடையாளமாக வானில் ஒரு நட்சத்திரம் தோன்றியது. இந்தக் காலத்தில் யூதாவுக்கு ராஜா பிறந்திருக்கிறார் என ஏரோது மன்னனிடம் சாஸ்திர அறிஞர்கள் மூன்று பேர் கூற, அதைக் கேட்டு பயந்த ஏரோது மன்னன் தன் நாட்டில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொல்ல உத்தரவிட்டு  வரலாற்றில்  கரை தேடிக் கொள்கிறான்.

இதில், குழந்தையை காப்பாற்ற வேண்டி கன்னிமரியாளும், யோசேப்பும் எகிப்துக்கு போக வேண்டுமென அசரீரியாவில் எச்சரிக்கப்படுகிறார். பின்னர் அவர்கள் நாசரேத்தில் குடியேறினர்.அங்குதான் இயேசு வளர்ந்தார். தமது இளம் வயதிலேயே பெரும் ஞானத்துடன் திகழ்ந்தார். பெற்றோருக்கு கீழ்படித்து நடந்தார். அவருக்கு இளமையிலேயே இயற்கையாக அபாரமான ஞானம் இருபதைக் கண்டு, திருச்சபை ஆயர்களும் யூதேயா மக்களும் ’ஒரு தச்சன் மகனுக்கு இத்தனை அறிவா’ என பரிசேயர்கள் கூட ஆச்சர்யம் அடைந்தனர்.அதனால் இயேசுவின் புகழ் பரவியது. அதேசயம இயேசு ஆலயத்தில் உள்ள உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாத பரிசேயர்கள் மற்றும் யூதமதத் தலைவர்களுடன் சொற்போர் நிகழ்த்தி ;வாதிட்டு வென்றார். எனவே அவரை கொல்லவும் பழிவாங்கவும் வகைதேடினர். அப்போது, இயேசுவை மக்கள் ஏற்றுக் கொண்டு, அவர்தான்  யூதாவி ராஜா எனப்பட்டம் கட்டினர். இது யூதமதத் தலைவர்களுகு பெரும் பொறாமையை உண்டுபண்ணியது.

கலிலேயாவுக்குச் சென்ற இயேசு, அங்கு நடைபெற்ற கானாவூர் கல்யாணத்தில்  திராட்சை ரசம் தீர்ந்ததால்,தன் தாயின் சொற்படி கேட்டு,காலியான  ஜாடிகளுக்குள் நீரை ஊற்றி எல்லோருக்கும் பரிமாறும்படி ஊழியர்களுக்கு கூறினார். அது திராட்சை ரசத்தைக் காட்டிலும் ருசியாக இருந்ததாக விருந்துக்கு வந்த மக்கள் கூறினர். அதுதான் இயேசு நடத்திய முதல் அற்புதம்.அதன்பின், மாற்றுத்திறனாளிகளைக் குணப்படுத்தினார். பிணியாளிகளின் கஷ்டம் தீர்த்தார். பிசாசு பிடித்தவனை  குணமாக்கினார். 16 வயதில் இருந்த சிறுமியையும், மக்தளேனா மரியாளின் சகோதரன் லாசருவை உயிர்த்தெழச் செய்தார். குஷ்டரோகிகளை சொஸ்தமாக்கினார். தன் எச்சிலை துப்பி எதில் உண்டான நீரில் இருந்து குருடருக்கு பார்வை கொடுத்தார்.

அதே ஊரில் அதிகாலையில் இருந்து தூண்டில் போட்டு மீன் அகப்படாத பேதுருவை கடலில் ஆழமில்லாத இடத்தில் வலையைப் போட்டு மீன்பிடிக்கச்செய்து உன்னை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என அவனை தன் சீடனாக ஆக்கினார். இப்படி பரிசுத்த சீமோன் (பேதுரு என்று அழைக்கப்பட்டவர்)  பரிசுத்த அந்திரேயா,யாக்கோபு (செபெதேயுவின் குமாரன்),யோவான்,பிலிப்பு,பரிசுத்த பர்த்தலேமியு,பரிசுத்த தோமா,பரிசுத்த மத்தேயு ,பரிசுத்த யாக்கோபு (அல்பேயுவின் குமாரன்),பரிசுத்த ததேயு,பரிசுத்த சீமோன் (கானானியன்),யூதாஸ் காரியோத் ,ஆகியோரை தனது சீடர்களாக்கி மக்களுக்கு நல்லதுசெய்து வந்தார். ஒய்வுநாளில் கூட அவரோடு சீடர்கள் கடவுளைத் துதித்து இயேசுவையும் தேவனையும் மகிமைப்படுத்தியதை யூதா மதத்தலைவர்கள் ரசிக்கவில்லை. மாறாக விமர்சனங்கள் எழுப்பி இயேசுவின் மீதும் அவரது சீடர்கள் மீதும் புகார் கடிதம் வாசித்தனர்.

இந்த நிலையில், இயேசுவை கைதுசெய்ய யூதா ஆட்சியாளர்களால் முடியவில்லை புத்தரைப்போன்று இயேசுவும் மக்கள் மொழியில் பேசி மக்களில் ஒருவராக தன்னை இணைந்து அவர்களிடம் தன் கொள்கைகளை விளக்கி யோவானிடம் ஞானஸ்தானம் பெற்று எளிமையாக வாழ்ந்து வந்ததால், அவரை கைது செய்ய பயந்தனர்.

அவர் மீது வலுவான குற்றம்சாட்டி அவரைக் கைது செய்ய யூதாஸ் இஸ்காரியோத் என்ற சீடரைக் கொண்டு இயேசுவைக் கைது செய்ய ஆட்சியாளர்கள் வகை  தேடினர். பின்னர் ஒலிவமலை தோட்டத்தில் உள்ள கெத்சமனே தோட்டத்தில் இயேசு ஜெபித்துக்கொண்டிருந்தபோது, யூதாசு பிசாசுவால் ஆட்டுவிக்கப்பட்டு,வெறும் முப்பது வெள்ளிக்காசுகளுக்காக  இயேசு முகத்தில் முத்தமிட்டு, அவரைக் காட்டிக் கொடுத்து பின் தன் குற்றவுணர்ச்சியால் நாண்டுகொண்டு இறந்தான்.

இயேசுவுக்கு எதிராகத் திரண்டிருந்த மக்கள் மற்றும் யூத மதத் தலைவர்கள் கலகக்காரரான இயேசுவை சிலுவையில் அறைய வேண்டுமென, யூத உரோம தலைவர் பொந்தியு பிலாத்துவுக்கு கோரிக்கை விடுகின்றனர். இவர் மீது நான் ஒருகுற்றமும் காணவில்லை என்று கூறி தன் மனைவி சொல்படி அவரை விடுவிக்க முடியாமல் இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதாக யூதா மதத்தலைவர் பரிசேயர்கள் மக்கள் கூறியதுபோல் இயேசுவை சிலுவையில் அறையச் சொல்லி உத்தரவிட்டு தன் கையை நீரால் கழுவியபடி இயேசுவை சிலுவையில் அறையும்படி உத்தவிடுகிறார்.

இயேசுக்கு எதிரானவர்களின் விருப்படி வழிநெடுக்க இயேசு முட்சாட்டையால் அடித்து, முட்கிரீடம் சூட்டப்பட்டு சிலுவையைச் சுமக்க வைத்து கொல்கதா மலையில் அவருக்கு இடது புறம், வலது புறம் இரு கள்ளர்களை சிலுவையில் அறையவிட்டு, அவரை சிலுவையில் ஏற்றிக் கொன்றனர். மீண்டும் மூன்றாள் நாள் இயேசு உயிர்த்தெழுந்தார்.

முப்பத்து மூன்று வயதில் மரணித்து உயிர்ந்த இயேசு , பரம தந்தையின் சொற்படி கேட்டு உலக மக்களின் பாவத்தை தீர்க்க சிலுவையில் அறைந்து தன்னையே ஏகபலியாக ஒப்புக்கொடுத்து உயரிய தியாகத்தால் உலக மக்களை ரட்சித்தார் என்று கிறிஸ்துவர்களால் புகழப்படுகிறது.

கிறிஸ்துமஸ் எப்போது கொண்டாடப்பட தொடங்கியது ;

இந்நிலையில், இயேசுவின் பிறந்த நாளான குளிர்மாதமான டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினமாக உலகமெங்கிலும் கொண்டாடப்படுகிறது. அதாவது இயேசு டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்ததாக கிபி.21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர் செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானூஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்,  கி.பி.  நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில் 354ஆம் ஆண்டளவில் ரோமில் தொகுக்கப்பட்ட பிலோகலசின் நாட்குறிப்பிலும் இயேசுவின் பிறந்ததினம் டிசம்பர் 25 ஆம் நாள் என குறிப்பிட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆலயங்களில் உள்ள திருச்சபை மக்களின் வீடுகளுக்கு கேரல் ரவுண்ட்டு என்ற பெயரில், சாண்டா கிளாஸ் தாத்தா வேடம் அணிந்து மத்தளத்துடன் பாட்டுப்பாடிச் சென்று இனிப்பும் கேக்கும் வழங்குவார்கள்.
கிறிஸ்துமஸ் அன்று கேக் வெட்டி  அருகில் உள்ள அன்பர்களுக்கும் ஏழைகளுக்கும் வழங்கி கிறித்துமஸ் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். ஆலயங்களில் இயேசுவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும்.

மேலும் இயேசு நபிகளைப் போல் பூமியில் அவதரித்த அல்லாவின் இறைத்தூதர் என்ற ஒரு கருத்தும் இஸ்லாமியர்களிடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.