புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 மே 2022 (08:19 IST)

அணு உலை கழிவை கடலில் கலக்கும் ஜப்பான்! – சுற்றுசூழல் ஆர்வலர்கள் கவலை!

Fukushima
புக்குஷிமா அணு உலை விபத்தின்போது சுத்திகரிக்கப்பட்ட அணு உலை கழிவு நீரை ஜப்பான் கடலில் கலக்க உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் புக்குஷிமா அணுமின் நிலையம் சேதமடைந்தது. இதனால் அதிலிருந்து வெளிப்பட்ட கதிரியக்கம் கொண்ட ஒரு லட்சத்து 25 ஆயிரம் டன் கழிவு நீர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலன்களின் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

அவற்றில் இருந்த கதிரியக்கத்தன்மை சுத்திகரிக்கப்பட்ட நிலையில் அதை கடலில் கலந்து விடுவது என ஜப்பான் அரசு முடிவெடுத்திருந்தது. ஆனால் இதனால் சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்படலாம் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கதிரியக்கம் சுத்திகரிக்கப்பட்டதால் பாதிப்பு இருக்காது என ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் வழங்கிய ஒப்புதலின் அடிப்படையில் இந்த ஆண்டு இறுதியில் கழிவுநீரை கடலில் கலக்கும் பணி தொடங்கும் என கூறப்படுகிறது.