1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை: இந்தியாவில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை: இந்தியாவில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!
ஜப்பான் பிரதமர் இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்திருந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் இந்திய ஜப்பான் பிரதமர்களின் சந்திப்பு நடந்தது என்பது தெரிந்ததே. 
 
இந்த சந்திப்பின் போது இரு நாட்டு நல்லுறவை வளர்ப்பது மற்றும் இந்தியாவில் ஜப்பான் முதலீடு செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலை அடுத்து ஐந்து ஆண்டுகளில் ஜப்பான் 3.20 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
இந்திய மற்றும் ஜப்பான் பிரதமர்கள் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.