திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:49 IST)

உலகின் மிகவும் வயதான நபர்; கின்னஸ் சாதனை மூதாட்டி காலமானார்!

Kane Tanaka
உலகின் மிகவும் அதிக வயதான நபர் என்று கின்னஸ் சாதனை படைத்த ஜப்பான் மூதாட்டி காலமானார்.

உலகில் பல்வேறு சாதனைகளுக்காக மக்கள் பலர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று வருகின்றனர். நீண்ட காலம் உயிர்வாழ வேண்டும் என்பது புராண காலம் தொடங்கி பலருக்கும் பெரும் ஆசையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மற்றவர்களை காட்டிலும் அதிக காலம் வாழ்ந்து சாதனை படைத்தவர் ஜப்பானை சேர்ந்த மூதாட்டி கேன் டனாகா. 119 வயது வரை வாழ்ந்துள்ள இந்த மூதாட்டி உலகின் மிகவும் வயதான நபர் என கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றார். தற்போது இந்த மூதாட்டி உயிரிழந்துள்ள நிலையில் ஜப்பான் மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.