1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (12:15 IST)

ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணைகளை ஏவிய வட கொரியா!

missile
ஜப்பான் கடல் பகுதியில் 3 ஏவுகணைகளை வடகொரியா ஏவி சோதனை செய்து பார்த்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது
 
வட கொரியாவில் உள்ள சுனான் என்ற பகுதியில் இருந்து ஜப்பான் கடலை நோக்கி அடுத்தடுத்து மூன்று ஏவுகணைகளை ஏவி சோதனை செய்யப்பட்டதாகவும் துல்லியமாக தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணை ஏவப்பட்டதை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஏற்கனவே வடகொரியா 15 முறை ஏவுகணை பரிசோதனை செய்த நிலையில் இது 16வது முறையாக மீண்டும் சோதனை செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
வடகொரியாவில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிரகடனப் படுத்தப்பட்டாலும் ஏவுகணை பரிசோதனை மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது