செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth.K
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (09:00 IST)

பெண்களுக்கு எதுக்கு படிப்பு? 3ம் வகுப்போட நிறுத்துங்க! – தாலிபான் போட்ட உத்தரவு!

Afghanistan
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.



தாலிபான் அமைப்பு மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் தற்போது அங்கு தாலிபான் ஆட்சி தொடர்ந்து வருகிறது. ஆனால் அந்நாட்டு சட்டத்திட்டங்களில் தாலிபான் அமைப்பு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக பெண்களுக்கு, பெண் சுதந்திரத்திற்கு எதிரான சட்டத்திட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இருபாலர் கல்லூரிகளை இழுத்து மூடிய தாலிபான் ஆண்கள் மட்டுமே கல்லூரி செல்ல அனுமதி அளித்தது. தொடர்ந்து பெண்கள் பொது இடங்களுக்கு தங்களது குடும்பத்தை சேர்ந்த ஆண் ஒருவர் துணையின்றி செல்லக் கூடாது என்றும் சட்டம் வகுத்தது. மேலும் அழகு நிலையங்கள், பூங்காக்கள், உடற்பயிற்சி மையங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு அனுமதி கிடையாது என தடை விதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது பெண் குழந்தைகளின் கல்விக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் 3ம் வகுப்புக்கு மேல் படிக்கக் கூடாது என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு பெண்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தாலிபான்களின் சட்டத்திட்டங்கள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானை பல ஆண்டுகள் பின்னோக்கி இழுத்து செல்வதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K