திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (18:46 IST)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பற்றி அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை - டிஜிபி சங்கர் ஜிவால்

Shankar Jiwal
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பற்றி அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 முதல் தொடங்க உள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்  மற்றும் யார் யாருக்கு இந்த பணம் கிடைக்கும் என்பது குறித்து அறிவிப்பை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு  வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், ‘ மகளிர் உரிமைத் தொகைக்கு மத்திய அரசின் ஆதிதிராவிட நலத்திட்ட நிதி பயன்படுத்தப்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர்

இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த ஆதிதிராவிடர் துணைத் திட்டங்களை நிதியை பயன்படுத்தி உள்ளதாக புகார் தரப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் துணை திட்டம் அதற்கான நிதி ஒதுக்கீடு முறையை பற்றிய தவறான புரிதல் காரணமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்ட பயன்கள் பட்டியல் இனத்தவர் பழங்குடி மக்கள் தொகைக்கு ஏற்ப கிடைப்பதை உறுதி செய்வதை ஆதி திராவிடன் திட்டத்தின் நோக்கம்

பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயன்களுக்கு நிதி தனியாக ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியை பட்டியல் இன பிரிவு மக்களுக்கு மட்டுமே செலவிட முடியும்.

2023 24 வரவு செலவுத் திட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில்  பட்டியல் இனத்தவருக்கு ரூபாய் 1540 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு விளக்கமளித்திருந்தது.

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பற்றி அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:’’ கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பற்றி உண்மைக்கு மாறாக தகவல் பரப்பப்படுகின்றன.

இதுபோன்ற பொய்யான தகவல்கள் பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.