1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 17 ஜூலை 2023 (20:49 IST)

பிரபல பாடகி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

hasiba noori
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி ஹசிபா நூரி இன்று மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாலகி ஹசிபா நூரி(38). இவர் பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவில் உள்ள  குசாவில் ஒரு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார்.

அப்போது, மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

பாடகி ஹசிபா நூரி கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலிபான்களிடம் இருந்து  தப்பித்து, பாகிஸ்தானில் புகுந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து சுமார் 14 லட்சம் அகதிகள் பாகிஸ்தானில் குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

பாடகி ஹசிபாவின் மறைவுக்கு பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.