ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 12 ஜூலை 2023 (14:07 IST)

‘கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில்’ விண்ணப்பிக்கும் பயனாளர்களின் கைவிரல் ரேகை கட்டாயம்- உணவு பாதுகாப்புத்துறை

‘கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில்’ பயன் அடைய விண்ணப்பிக்கும் பயனாளர்களின் கைவிரல் ரேகை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென்று அனைத்து துணை ஆணையர்களுக்கும் உணவு பாதுகாப்புத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 முதல் தொடங்க உள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்  மற்றும் யார் யாருக்கு இந்த பணம் கிடைக்கும் என்பது குறித்து அறிவிப்பை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு  வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், ‘கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில்’ பயன் அடைய விண்ணப்பிக்கும் பயனாளர்களின் கைவிரல் ரேகை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென்று அனைத்து துணை ஆணையர்களுக்கும் உணவு பாதுகாப்புத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.

அதில், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்றும், வரும் 17 ஆம் தேதிக்குள் அனைத்து ரேசன் கடைகளிலும் கை விரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.