வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (11:11 IST)

ஆண்டிபாடிகளை பெருக்கும் பூஸ்டர்... ஒமிக்ரானுக்கு இதுதான் தீர்வா..?

ஆண்டிபாடிகளை உடலில் பெருக்கும் ஆற்றல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல். 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவது குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கிய மாறுபட்ட கொரோனா வைரஸான ஒமிக்ரான் பல நாடுகளுக்கு பரவத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பல ஒமிக்ரான் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
 
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு, ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. தற்போது அது 57 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இது மேலும் பல நாடுகளுக்கு பரவக்கூடிய ஆபத்து இருக்கிறது. அதோடு பல்லாயிரம் பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்படும் என தெரிவித்தது. 
 
இதனிடையே பைசர் மற்றும் பயோண்டெக் நிறுவனம் ஒமிக்ரான் பரவலுக்கு எதிரான ஆண்டிபாடிகளை உடலில் பெருக்கும் ஆற்றல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியில் உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி மற்ற வேரியண்ட்களுக்கு எதிராக செயல்பட கூடிய வகையாகவும் மூன்றாவது டோஸ் எனப்படும் பூஸ்டர் டோஸ் ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படும் என ஆண்டிபாடிகளை பெருக்க வாய்ப்பு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது என இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.