1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 9 டிசம்பர் 2021 (08:04 IST)

ஒமிக்ரான் நோயாளி குணமாகி டிஸ்சார்ஜ்: நம்பிக்கை அளித்த மருத்துவர்கள்

மும்பையைச் சேர்ந்த ஒமிக்ரான் நோயாளி குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது மருத்துவர்களுக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. 
 
இந்தியா உள்பட பல நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதும் இந்த வைரஸ் டெல்டா வைரசை விட பல மடங்கு வீரியம் மிக்கது என்பதால் இந்த வைரஸ் தாக்கப்பட்டவர்கள் குணமடைவது அரிது என்றும் கூறப்பட்டு வந்தது 
 
ஆனால் மும்பையை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட தகுந்த சிகிச்சையின் காரணமாக அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்
 
அவர் முழுவதுமாக குணமாகிவிட்ட்தாகவும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்/ ஒமிக்ரான்  நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் டிஸ்சார்ஜ் ஆகி இருப்பது அனைவருக்கும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.