ஒமிக்ரான் அதிக இறப்புகளை ஏற்படுத்தாது... அமெரிக்க விஞ்ஞானி ஆறுதல் தகவல்!
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும் கடுமையான நோயை ஏற்படுத்தாது என அமெரிக்க விஞ்ஞானி அந்தோனி பாசி கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் அமெரிக்கா, நியூயார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் நுழைந்துவிட்டது. அனைத்து நாடுகளிலும் விமான நிலையத்தில் பயணிகள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் குறித்து அமெரிக்காவின் உயர் விஞ்ஞானி அந்தோனி பாசி கூறியதாவது, தென் ஆப்பிரிக்காவில் உருவாகி பல நாடுகளில் பரவி வரும் ஒமிக்ரான் வைரசானது வேகமாக மிக பரவக்கூடிய ஒன்றாகும். ஆனால் கொரோனாவின் முந்தைய மாறுபாடான டெல்டாவை விட இது தீவிரமானது அல்ல.
அதிகமாக பரவக்கூடிய ஒமிக்ரான் வைரஸ் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தாது. நோயாளிகள் மருத்துவமனையில் அதிகமாக அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இறப்புகள் அதிகமாக இருக்காது என தெரிவித்துள்ளார்.