1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:32 IST)

100 ஆண்டு தவம்: கிடைத்தது பிளாக் பேந்தர் போட்டோ!!

ஹாலிவுட் திரைப்படம் வெளியானபின் பிளாக் பேந்தர் பற்றிய பேச்சு சமீபத்தில் அதிகமாகவே உள்ளது. ஆனால், பிளாக் பேந்தர் (கருஞ்சிறுத்தை) ஒன்றை படம் பிடிப்பது என்பது அரியதொரு நிகழ்வாக ஆப்பிரிக்க காட்டில் நிகழ்ந்துள்ளது.
 
இதனை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் வில் பர்ராட்-லூக்காஸ் சாதித்துள்ளார். கடந்த 100 ஆண்டுகளில், கறுப்பு நிற சிறுத்தையை படம்பிடிக்கப்படும் முதல் சம்பவம் இதுவென கருதப்படுகிறது. அதிக தகவல்கள் இல்லாத இந்த விலங்கு பற்றி அடையாள முக்கியத்துவமான சில புகைப்படங்களே உள்ளன. 
கருஞ்சிறுத்தை (பேன்ந்தர்) பற்றிய வதந்திகளை கேட்போம். ஆனால், இதனை கறுஞ்சிறுத்தை (லெப்பேர்ட்) அல்லது கறுப்பு ஜாக்குவார் என்ற சொற்களால் கென்யாவில் அழைக்கின்றனர். வழிகாட்டி ஒருவரின் சொற்படி சிறுத்தையின் தடங்களை பின்தொடர்ந்த வில் பர்ராட்-லூக்காஸ், கேமரா பொறிகளை ஓரிடத்தில் அமைத்தார்.
 
"நீங்கள் கேமரா பொறி வைத்திருக்கும் இடத்திற்கு இந்த விலங்கு வருமா என்பது தெரியாது என்பதால், நான் நினைத்தப்படி படம்பிடிப்பது என்பது அனுமானம்தான்," என்கிறார் அவர். அவர்கள் பின்தொடர்ந்தது கருஞ்சிறுத்தையுடைய பாதையா, வழக்கமான சிறுத்தையின் பாதையா என்பது அவர்களுக்கே தெரியாது. 
எனது நம்பிக்கையை கைவிடவில்லை. ஒரு சில நாட்டகளுக்கு பின்னர் இந்த சிறுத்தையின் படத்தை பெற முடியாவில்லை. ஆனால், இந்த கருஞ்சிறுத்தையின் புகைப்படம் கிடைத்தது என்றால் நான் அதிஷ்டக்காரன் என்று எண்ண தொடங்கினேன்," என்று குறிப்பிடுகிறார் வில் பர்ராட்-லூக்காஸ்.
 
நான்காவது நாள் அவருக்கு அதிகஷ்டம் கிடைத்த நாளாகியது. "வழக்கமாக இத்தகைய கேமரா பொறிகளில் இருக்கின்ற விளக்கு இந்த விலங்கை தெளிவாக பார்க்க முடியும். ஆனால், இரவு என்பதாலும், அதன் நிறம் கறுப்பு என்பதாலும் அதன் கண்கள் புகைப்படத்தில் வெறித்து பார்ப்பதைதான் என்னால் பார்க்க முடிந்த்து என்று அவர் தெரிவிக்கிறார்.