புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 11 பிப்ரவரி 2019 (19:39 IST)

நடிகர் சிவக்குமாருடன் செல்பி எடுத்தால்...? வைரலாகும் புகைப்படம்

கடந்த வருடம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகர் சிவக்குமாருடன் ஒரு இளைஞர் செல்பி எடுக்க முயன்றார். அப்போது ஆவேசமடைந்த சிவக்குமார், அந்த இளைஞரின் செல்போனை கீழே தட்டிவிட்டார். இதனால் அந்த இளைஞன் கூட்டத்தில் தன் செல்போனை காணாமல் தேடும் காட்சி பரிதாபமாக இருந்தது.

அதை தள்ளிவிட்ட சிவக்குமாரின் செயலுக்கு பலதரப்பிலிருந்தும் விமர்சனங்கள்  எழுந்தன. பின்னர் சிவக்குமார் அந்த இளைஞனை அழைத்து புது செல்போனை வாங்கிக்கொடுத்தார். இவ்விஷயம் அப்போது வைரலானது. 
 
இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நெட்டிஷன்களால் இந்தப் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
அதில் முதல் படத்தில் மிக உயரமான கட்டிடத்தின் உச்சியில் நின்று ஒருவர் செல்பி எடுக்கிறார். இரண்டாவது படத்தில் மிகக்கொடிய சுறா மீனுடன் ஒருவர் செல்பி எடுக்கிறார். மூன்றாம் படத்தில் காட்டு ராஜாவான சிங்கத்துடன் அமர்ந்து ஒருவர் செல்பி எடுக்கிறார். அடுத்து ஒருவர் சிவக்குமாருடம் செல்பி எடுக்கிறார்.
 
அதாவது மேற்சொன்ன எல்லாவற்றையும் போல நடிகர் சிவக்குமாருடன் செல்பி எடுப்பது எவ்வளவு ஆபத்து என்பதை குறிப்பதாக இப்புகைப்படம் உள்ளது. இந்தப் புகைப்படமும் வைரலாகி வருகிறது.