சிக்கென மாறிய அனுஷ்கா!! கூடவே இருக்கும் ஆண் யார்?

Last Modified செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (11:05 IST)
உடல் எடையை குறைந்து, அற்புதமான அழகுடன் காணப்படும் அனுஷ்காவுடன் இருக்கும் ஆண் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
 
இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கண்டபடி அதிகரித்தார் நடிகை அனுஷ்கா. இதனால் பாகுபலி 2 படத்தின் போது எடை அதிகரித்து காணப்பட்டார். அவரை ஒல்லியாக காண்பிக்க கிராபிக்ஸ் பயன்படுத்தினார்கள்.
 
அதிகரித்த உடல் எடையை குறைக்க மிகவும் கஷ்டப்பட்டார் அனுஷ்கா. இதற்காக வெளிநாடு சென்று சிகிச்சை மேற்கொண்டார். இப்போது உடல் எடை குறைத்து, பழைய அனுஷ்காவாக, இன்னும் கூடுதல் அழகுடன் இருக்கிறார். இந்த புகைப்படத்தில் அவருடன் ஒரு ஆண் ஒருவர் இருந்தார்.
anush
 
இந்த புகைப்படத்தில் இருக்கும் ஆண் அனுஷ்காவின் காதலராக இருக்கலாம் என பலர் கமெண்ட் போட்டு வந்தனர். இதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அவருடன் இருக்கும் ஆண் ஒரு நியூட்டிரிசனிஸ்ட். அனுஷ்காவின் உடல் எடை குறைய அவர் முக்கிய பங்கை ஆற்றியிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :