சிவகார்த்திகேயனின் இமாலய வளர்ச்சி – வைரல் ஆகும் 10 வருட சேலஞ்ச் புகைப்படம் !

Last Updated: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (13:19 IST)
சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் 10 இயர் சேலஞ்ச்  புகைப்பட வரிசையில் இப்போது சிவகார்த்திக்கேயனும் விஜய்யும் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் 10 year challenge என்ற விஷயம் இப்போது வைரலாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் சாதாரண நபர்கள் முதல் அகில உலகப் பிரபலங்கள் வரை அனைவரும் கலந்துகொண்டு தங்களது இப்போதைய புகைப்படத்தையும் 10 வருடத்திற்கு முந்தையப் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த சேலஞ்சில் தமிழ் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது சிவக்கார்த்திக்கேயன் நடிகர் விஜய்யுடன் சிவகார்த்திகேயன் இருக்கும் இப்போதையப் புகைப்படம் மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துக்கொண்டப் படம் என இரண்டும் டிவிட்டரில் ரவுண்ட் வர ஆரம்பித்துள்ளது.


10 வருடங்களுக்கு முன்பு விஜய் அழகியதமிழ்மகன் நடித்துக்கொண்டிருந்த போது சாதாரண ரசிகராக அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட சிவகார்த்திகேயன், இப்போது 10 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கம்ர்சியல் ஹீரோவாகவும் தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார். இதனைப் பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் சிவாகர்த்திக்கேயனின் வளர்ச்சியை வானளாவப் புகழ்ந்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :