1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 மே 2024 (21:32 IST)

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

Jayakumar
திருநெல்வேலி காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.



திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துப்புதூரை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகியான ஜெயகுமார் தனசிங் சமீபத்தில் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா என்பது குறித்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஜெயக்குமார் எழுதியதாக ஒரு கடிதம் சிக்கியதும், அதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் பெயரு, இருந்ததாக தகவல் வெளியான நிலையில் அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது ஜெயக்குமார் மரணம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயக்குமாரின் முகம், கை, கால்கள் மற்றும் கழுத்துப்பகுதிகளில் இரும்புக் கம்பியால் சுற்றப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஏற்கனவே இறந்துபோன நபரை எரியூட்டினால்தான் குரல்வளை முற்றிலும் எரிந்து போகும் என்பதால் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் தெரிய வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K