செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 27 ஜனவரி 2024 (16:59 IST)

திருமண நிகழ்ச்சியின் போது விபத்து: 25 அடி ஆழ பள்ளத்திற்குள் விழுந்த உறவினர்கள்

italy accident
இத்தாலி நாட்டில்  ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலி நாட்டில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மணமகன் மற்றும் மணமகள் இருவரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியாக நடனமாடி நிகழ்ச்சியைக் கொண்டடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த இடத்தின் தரை தளத்தில் இருந்த மேற்கூரை திடீரென்று சரிந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில், மணமக்கள் மற்றும் உறவினர்கள் 25 அடி ஆழ பள்ளத்திற்குள் விழுந்தத நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சி பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.