கிராமத்தில் குடியேறினால் ரூ.25 லட்சம்- கல்பர்யா நிர்வாகம்
இத்தாலியில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள கிராமத்தில் வசிக்க வருபவர்களுக்கு ரூ.25 லட்சம் பணம் வழங்கப்படும் என கல்பர்யா நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகில் சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் நாடுகளில் ஒன்று இத்தாலி. இந்த நாட்டின் கலை, கலாச்சாரம், இசை, மொழி, சினிமா ஆகிவற்றிகாக பெரிதும் பாராட்டப்படுகிறது.
இத்தாலியில் கிராமங்களில் இருந்து நகரப் புறங்களை நோக்கி பெரும்பாலானோர் சென்று வருகின்றனர்.
இதனால், கிராம பொருளாதாரம் சரிந்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக நிபந்தனைகளுடன் கூடிய புதிய அறிவிப்பை கல்பர்யா நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, 40 வயதிற்குள் இருக்கும் நபர்கள் இங்கு வந்து புதிதாகதொழில் தொடங்க வேண்டும், 90 நாட்களில் குடியேற வேண்டும் என கூறியுள்ளது. இந்த நிபந்தனைகளை ஏற்று, இங்கு வந்து குடியேறினால் அவர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.