1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2023 (20:28 IST)

பூனையாக மாறிவரும் இளம்பெண்…

italy women
இத்தாலி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பூனை போல் தோற்றமளிக்க உடலில் சில மாற்றங்களை செய்து வருகிறார்.
 

உலகில் பல கோடி மனிதர்கள் வாழ்கின்றனர். இவர்கள் ஒவ்வொரும் பல வித்தியாசமான எண்ணங்கள் கொண்டிருக்கின்றனர்.

இதில் பலர் மக்களிடமிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்ள பலவற்றை செய்து வருகின்றனர்.

ஒருசிலர் டாட்டூகள் குத்திக் கொள்வது, பிரபலங்களை போல தோற்றம் கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி, பொம்மைகளை திருமணம் செய்தல் போன்ற செயல்கள் தொடர்கிறது.
இந்த நிலையில்,  பூனை போல் தோற்றமளிக்க இத்தாலி நாட்டைச் சேர்ந்த சியாரோ தெலாபேட் என்ற இளம்பெண் தனது நாக்கை இரண்டாக்குவது, 4 கொம்புகள் வைத்து, ஐலைனர். பச்சை குத்திக்கொள்வது அறுவைச் சிகிச்சைகள் மேற்கொண்டு பூனை போல் தோற்றத்திற்கு வர முயன்று வருகிறார்.