வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (20:06 IST)

மனைவிக்கு சமைக்க தெரியாது என்பதால் விவாகரத்து கோரிய கணவர்!

கேரளம் மாநிலத்தில்  மனைவிக்குச் சமைக்கத் தெரியாது என்பதை காரணமாகக் கூறி விவாகரத்து கோரி கணவன் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இன்றைய காலத்தில்   உலகில் பலரும் திருமண வாழ்க்கையில் இணைந்த பின், சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுகின்றனர்.

சினிமா நட்சத்திரங்களில் மட்டுமல்ல, விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோரில் வாழ்க்கையில் மட்டுமின்றி சாதாரண மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்த நிலையில், கேரளம் மாநிலத்தில்  மனைவிக்குச் சமைக்கத் தெரியாது என்பதை காரணமாகக் கூறி விவாகரத்து கோரி கணவன் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த கொடூர நடத்தையாகக் கருத முடியாதும் எனவும் விவாகரத்துக்கு இது போதுமானதாக காரணமில்லை எனக் கூறி இந்த மனுவை தள்ளுபதி செய்தது நீதிமன்றம்.