வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 27 ஜூலை 2019 (17:07 IST)

இடிபாடுகளில் சிக்கிய 5 வயது சிறுமி.. உயிர் போகும் நிலையிலும் தங்கையை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்

சிரியாவில் வான்வழித் தாக்குதலின் போது, இடிபாடுகளின் இடையே சிக்கிய 5 வயது சிறுமி, தான் சாகும் தருவாயிலும் தனது தங்கையை காப்பாற்றிய செய்தி பலரது மனதில் நெகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

கிளர்ச்சியாளர்களின் பிடியிலுள்ள சிரியாவில் பல பகுதிகளில் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இட்லிப் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் பலர் பலியானார்கள். இந்த தாக்குதலில் குடியிருப்பு ஒன்றின் கட்டிடம் இடிந்து விழுந்தது. அதில் 5 ஆவது தளத்தில் இருந்த சிறுமி நிஜாம் என்பவரின் தாய் அஸ்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி, உயிருக்கு போராடி கொண்டிருந்த 5 வயது சிறுமி ரிஹாம், கீழே விழ இருந்த, தனது 7 மாதமே ஆன தங்கை துகா-வின் சட்டையை கெட்டியாக பிடித்துகொண்டார். இதனால் அந்த குழந்தை கீழே விழாமல் உயிர் பிழைத்தது. மனைவியை இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

ஆனால் 7 மாத குழந்தையை காப்பாற்றிய அந்த 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி பலரது மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.