வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (14:44 IST)

கன்வேயர் பெல்ட்டில் சிக்கிய சிறுவன் – பதபதைக்க வைக்கும் வீடியோ

அமெரிக்காவில் விமான நிலையத்தில் கன்வேயர் பெல்ட்டில் தவறுதலாக சிக்கிய சிறுவனை பல போராட்டங்களுக்கு பிறகு அதிகாரிகள் உயிருடன் மீட்டனர். அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா விமான நிலையத்திற்கு பெண் ப்யனி ஒருவர் தனது 5 வயது மகனுடன் வந்திருக்கிறார். போர்டிங் பாஸ் வாங்குவதற்காக சிறுவனை இருக்கையில் அமர வைத்துவிட்டு வரிசையில் நின்றிருக்கிறார் அந்த பெண்.

அதற்குள் தன் சுட்டி வேலையை தொடங்கிய சிறுவன், அந்த பக்கம் இருந்த பயண பைகளை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்டில் ஏறினான். அது அந்த பையனை பேக்கேஜிங் செக்சனுக்கு கொண்டு சென்றது. சிறுவன் கன்வேயர் பெல்ட்டில் ஏறியதை பார்த்த சிலர் சம்பந்தபட்ட ஊழியரிடம் அதை தெரிவித்தனர். அவர் உடனே அந்த எந்திரத்தை நிறுத்திவிட்டு பையனை தேட தொடங்கினார். இது குறித்து மற்ற ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.

ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக பேக்கிங் கன்வேயருக்குள் சுற்றி வந்து கொண்டிருந்த சிறுவனை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்டுபிடித்து மீட்டனர். இது பற்றி ஊழியர் ஒருவர் கூறும்போது “அந்த பையனை மீட்க நான் உள்ளே நுழைந்தேன். ஆனால் அந்த சிறுவன் என்னை கண்டதும் தப்பியோடி மற்றொரு எந்திரத்தின் கன்வேயரில் ஏறிக்கொண்டான்” என்று கூறியிருக்கிறார்.

ஐந்து நிமிடத்தில் மொத்த விமான நிலையத்தையும் கதிகலங்க செய்த அந்த சிறுவனின் சேட்டைகள் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.