இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங் இன்று உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்.
1932ம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் பாகிஸ்தான் பகுதியில் பிறந்தவர் மன்மோகன் சிங். இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலில் முக்கிய பங்கு வகித்த பொருளாதார மேதையான இவர் கடந்த 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராகவும் பதவி வகித்தார்.
இன்று மாலை திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனது 92வது வயதில் மன்மோகன் சிங் காலமானார்.
இந்த செய்தி கேட்டு மன்மோகன் சிங்கை காண்பதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் புது டெல்லிக்கு புறப்பட்டுள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் டெல்லிக்கு விரைந்துள்ளனர். பல அரசியல் தலைவர்களும் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K