1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (20:23 IST)

மின் இணைப்புடன் சார்ஜரை அருகில் வைத்து தூங்கியவருக்கு நேர்ந்த சோகம் !

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது ஐபோனுக்கு போலி ஐபோன் சார்ஜரை வாங்கியுள்ளார். இரவில் அதற்கு  சார்ஜ் செய்வதற்க்காக மின் அதை மின் இணைப்பு  செய்துள்ளார். பின்னர் அதன் அருகிலேயே தூங்கிவிட்டார்.
இதன் பின்னர், காலையில் எழுந்து பார்த்த போது, அவரது நெக்லஸ் அணிந்த கழுத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பதறிப்போன அப்பெண் ,அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் சி.எஸ். மாட் குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவர் பரிசோதித்த போது அவர் கழுத்தில்  அணிந்திருந்த நெக்லஸ் கறுக்கிப்போயிருந்தது.மேலும் அவர் கழுத்தில் 2 ஆம் நிலை தீக் காயம் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து மருத்துவர் அவரிடன் இதுகுறித்து கேட்டதற்கு, இரவில் படுக்கும் போது சார்ஜர் அருகிலேயே துங்கிவிட்டதாகத் தெரிவித்தார். அதனால்தான் நெக்லஸ் கருத்து கழுத்தில் காயம் ஆகி யுள்ளதாக மருத்துவர் தெரிவித்தார்.  அப்பெண்ணுகு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.