தொடர்புடைய செய்திகள்
- 16 ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனையை நிறைவேற்றும் அமெரிக்கா!
- ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 5 பில்லியன் டாலர் அபராதம் விதிப்பு - தனியுரிமை மீறல் குற்றச்சாட்டு
- பேயை விரட்ட தாய் செய்த காரியம் .. 3 வயது மகள் பலி !
- சிறுமியை தூக்கி வீசியெறிந்த காட்டெருமை.. மனதை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ
- பாகிஸ்தானில் இன்னும் 40,000 பயங்கரவாதிகள் –ஒத்துக்கொண்ட இம்ரான் கான் !
3 கோடிக்கு ஏலம் போன ”ஷூ”.. பிரம்மிப்பூட்டும் செய்தி
அமெரிக்காவில் உலக வரலாற்றிலேயே ரூ.3 கோடிக்கு ஏலம் போன ”ஷூ” என்ற சாதனையை படைத்துள்ளது பிரபல விளையாட்டு வீரரின் காலணி.
விளையாட்டு வீரர்களுக்கான ஷூக்களை சிறப்பாக தயாரித்து வழங்குவதில் முன்னணியாக விளங்கிவருகிறது அமெரிக்காவைச் சேர்ந்த “நைக்” ஷூ நிறுவனம். இந்த நிறுவனத்தை நிறுவியவரான பில் போவர்மேன் ஒரு தடகள வீரர். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் போது தடகள வீரர்களுக்காக “மூன் ஷூ” என்ற ஷூவை வடிவமைத்தார். மொத்தம் 12 ஜோடி மூன் ஷூக்கள் தயாரித்து வழங்கப்பட்டன.
சமீபத்தில் பில் போவர்மேன் தயாரித்த ஒரு ஜோடி “மூன் ஷூ” அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டது. அப்போது கனடாவைச் சேர்ந்த மைல்ஸ் நடால் என்பவர், அந்த ஷூவை 4 லட்சத்து 37 ஆயிரத்து 500 அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் எடுத்தார். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3 கோடியே 1 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இந்நிலையில் “மூன் ஷூ”, உலக வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட “ஷூ” என்ற சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
