ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:57 IST)

200 விமான சேவைகளை திடீரென ரத்து செய்த அமெரிக்கா: என்ன காரணம்?

அமெரிக்காவில் திடீரென 200 விமானங்கள் திடீரென ரத்து செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒருபக்கம் கொரோனா வைரசால் லட்சக்கணக்கானோர் தினமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஒமிக்ரான் வைரஸால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி அமெரிக்காவுக்கு ஏராளமானோர் வருகை தர இருப்பதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது
 
மேலும் ஒமிக்ரான் மற்றும் கொரோஅனவால் விமான நிறுவன ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் பாதிப்பு அடைந்திருப்பதால் விமான சேவைகளை நிறுத்தியதாக விமான நிறுவனங்கள் அறிவித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது